×

டிஎன்பிஎல் பைனலில் இன்று கோவை – நெல்லை பலப்பரீட்சை

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் பைனலில் லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டிஎன்பிஎல் 7வது சீசன் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட மொத்தம் 7 அணிகள் லீக் சுற்றில் களமிறங்கின. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த கோவை கிங்ஸ் (12), திண்டுக்கல் டிராகன்ஸ் (12), நெல்லை கிங்ஸ் (10), மதுரை பேந்தர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

குவாலிபயர்-1ல் திண்டுக்கல் டிராகன்சை 30 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் பைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மதுரை அணியை 4 ரன் வித்தியாசத்தில் வென்ற நெல்லை கிங்ஸ், அடுத்து குவாலிபயர்-2ல் திண்டுக்கல் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் கோவை – நெல்லை அணிகள் இன்று மோதுகின்றன. நெல்லை ஐசிசி மைதானத்தில் நடக்க உள்ள இப்போட்டி இரவு 7.15க்கு தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் முறையாக பைனலில் விளையாடுவதால் புதிய சாம்பியனாக முடிசூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் கோவை 4-1 என முன்னிலை வகிக்கிறது.

* நடப்பு தொடரில், கோவையில் நடந்த ஆட்டத்தில் நெல்லை 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வென்றது.

* கோவை கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை.

* நெல்லை கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் தோற்றுள்ளது.

The post டிஎன்பிஎல் பைனலில் இன்று கோவை – நெல்லை பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Nelli ,TNPL ,Tirunelveli ,Laika ,Coimbatore Kings ,Nellie Royal Kings ,Tamil Nadu Premier League ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...