×

விவசாயி கஷ்டப்படுவதை பார்த்து புல்லுகட்டு வண்டியை 3 கி.மீ தூரம் தள்ளி சென்ற கர்நாடக அமைச்சர்: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

தார்வாட்: சாலையில் விவசாயி கஷ்டப்படுவதை பார்த்து புல்லுகட்டு வண்டியை மூன்று கிமீ தூரத்துக்கு அமைச்சர் சந்தோஷ்லாட் ஓட்டி சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தார்வாட் மாவட்டம், கலகத்தகி அருகே மதகிஹோனாலியில் உள்ள தனது அமிர்தா இல்லத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கலகத்தகி-தடாசா மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஹொன்னள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவர் பசு தீவனத்துக்காக, புல்லுகட்டு வைத்து கொண்டு வண்டியில் கஷ்டப்பட்டு தள்ளி கொண்டு சென்றுள்ளார்.

இதை பார்த்த அமைச்சர் சந்தோஷ் லாட், காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து விவசாயி அருகே கார் நின்றது. இதை பார்த்த விவசாயி அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தார். அவரிடம், எங்கு செல்கிறீர்கள் என்று அமைச்சர் கேட்டார். அதற்கு பசு தீவனத்துடன் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

விவசாயி பேசி கொண்டு இருந்த போதே, அவரிடம் இருந்த தள்ளுவண்டியை வாங்கி நானே உங்கள் வீட்டிற்கு தள்ளி வருகிறேன். நீங்கள் என் பின்னாடி வாருங்கள் என்று வண்டியை தள்ளி சென்றார். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு புல்லுகட்டு அடங்கிய வண்டியை அமைச்சர் தள்ளி சென்றார். அமைச்சர் புல்கட்டு அடங்கிய தீவன வண்டியை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post விவசாயி கஷ்டப்படுவதை பார்த்து புல்லுகட்டு வண்டியை 3 கி.மீ தூரம் தள்ளி சென்ற கர்நாடக அமைச்சர்: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,minister ,Dharwad ,Santhoshlat ,Dinakaran ,
× RELATED கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில்...