×

பந்தலூர் அருகே கம்பியில் உரசும் மூங்கில் மரங்களால் மின்தடை

பந்தலூர்: பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் மின்கம்பியில் உரசும் மூங்கில் மரக்கிளைகளால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன. இதன் அருகில் செல்லும் மின்கம்பிகள் மீது மூங்கில் மரக்கிளைகள் கம்பியில் உரசுவதால் மழை பெய்யும்போது மின்தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதால் பொதுமக்களின் மின்சார உபயோக பொருட்கள் அடிப்படி பழுதாகி விடுகிறது. பஞ்சாயத்து கிணறுகளில் வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்கள் இயங்குவதில்லை. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதியில் உள்ள மின்கம்பிகளில் உரசும் மூங்கில் மரக்கிளைகளை வெட்டி அகற்ற மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே கம்பியில் உரசும் மூங்கில் மரங்களால் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Ammankavu ,Dinakaran ,
× RELATED பழங்குடியினர் காலனியில் கனமழையால் மண்சரிவு