×

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரம்: கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க அன்புமணி வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாமக நிர்வாகிகள் காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம் தர்காஸ் மனோகரன் ஆகியோர் கொல்லப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அழைப்பு வந்துள்ளது ஆனால் கலந்து கொள்வது குறித்து கட்சி ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரம்: கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BAMA ,Chengalpattu district ,Anbumani ,Chengalpattu ,PAMAK ,Kattur ,Dinakaran ,
× RELATED வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள்...