×

பெற்ற குழந்தையின் கழுத்தை அறுத்த தாம்பரம் விமானப்படை கேண்டீன் ஊழியர் கைது

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே பச்சிளம் குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(30). சென்னை தாம்பரம் விமானப்படை அலுவலக கேன்டீனில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21). இவர்களுக்கு பிறந்து 26 நாட்களே ஆன லவா என்ற ஆண் குழந்தை உள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்த மணிகண்டன் நேற்று குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது, மனைவியின் மீது ஏற்பட்ட திடீர் சந்தேகத்தால், ‘இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை’ எனக்கூறி மனைவியிடம் தகராறு செய்து பிளேடால் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையில் அறுத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். ரத்தவெள்ளத்தில் அலறி துடித்த குழந்தை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் தான் பணியாற்றும் தாம்பரம் விமானப்படை கேன்டீனில் மணிகண்டன் இருப்பது தெரியவந்தது. இன்று காலை அங்கு சென்ற அணைக்கட்டு போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெற்ற குழந்தையின் கழுத்தை அறுத்த தாம்பரம் விமானப்படை கேண்டீன் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram Air Force Canteen ,Vellore ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...