×

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: ரோகித் படை சாதிக்குமா?

டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை (12ம்தேததி) துவங்கி 16ம் தேதி வரை ரோசோவில் உள்ள வின்ட்சர் பூங்காவில் (டொமினிகா) நடைபெறும். 2வது டெஸ்ட் ஜூலை 20 முதல் 24 வரை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் (டிரினிடாட்) பார்க் ஓவலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறத் தவறிவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசமான வடிவமாக இருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் தங்களது ரசிகர்களுக்கு முன்னால் ஒரு புதிய உத்வேகத்துடன் ஆடி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த விரும்புகின்றனர்.

மறுபுறம், இந்தியா ரோகித் சர்மாவின் தலைமையில் புதிய தொடக்கத்தை உருவாக்க விரும்புகிறது. கடந்த மாதம் லண்டனில் உள்ள ஓவலில் நடந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இருந்து இந்தியா சில மாற்றங்களைச் செய்துள்ளது. அணியில் முதல் முறையாக மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஏற்கெனவே ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. சவாலை சமாளித்து ரோகித் படை வெல்லும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(து.கேப்டன்), கேஎஸ் பரத், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், அக்சர் படேல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட். வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், ஜோசுவா டா சில்வா, அலிக் அத்தனாசே, ரஹ் கார்ன்வால், ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், டேகனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜோமெல் வாரிக்கன்.

The post இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: ரோகித் படை சாதிக்குமா? appeared first on Dinakaran.

Tags : India ,West ,Indies ,Rohit ,Dominica ,West Indies ,Dinakaran ,
× RELATED உலகின் 3வது பொருளாதார நாடு யார்...