×

இஸ்ரோவின் சந்திராயன் 3 ஏவுகணை விண்ணில் செலுத்தும் நிகழ்வை நேரலையாக மாணவர்களுக்கு காண்பிக்க கோரிக்கை: பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை

நாமக்கல்: 14-07-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.35pm மணியளவில் இந்தியாவின் மைல்கல் திட்டமான நிலவில் தரையிறங்கும் சந்திராயன்-3 செயற்கைக்கோள் ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளதாக ISRO அறிவித்து உள்ளது.

இந்நிகழ்வை பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பினால் மாணவர்கள் மனதில் அறிவியலில் வானியல் பற்றிய விஞ்ஞான அறிவை வளர்த்து கொள்ள ஊக்கப்படுத்துவதாய் அமையும். மேலும் ஏற்கெனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை கடைசி இரு பாட வேளைகள் (3.00pm to 4:10pm) கல்வி இணை செயல்பாடுகள் பாட வேளையாக இருக்க ஆணையிடப்பட்டது. ஆனால் சந்திராயன்-3 செயற்கைக்கோள் ஏவுகணை 2.35pm மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது

14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 2.15pm மணி முதல் கல்வி இணை செயல்பாடுகள் அடிப்படையில் இந்நிகழ்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் மனதில் கொண்டு சேர்த்து அறிவியலில் வானியல் பற்றிய விஞ்ஞான அறிவை ஊக்கபடுத்த எதுவாக, நேரலையில் ஒளிபரப்ப ஆவண செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று ஆய்வக உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் தொலைகாட்சி பெட்டி, Projector, இணையதள வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் (HI TECH COMPUTER LAB) என நேரலையை மாணவர்களுக்கு கண்பிக்க தேவையான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே உள்ளது என்று பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post இஸ்ரோவின் சந்திராயன் 3 ஏவுகணை விண்ணில் செலுத்தும் நிகழ்வை நேரலையாக மாணவர்களுக்கு காண்பிக்க கோரிக்கை: பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chandrayaan 3 launch ,School Laboratory Assistants Association ,Namakkal ,India ,Sriharikota ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...