×

இமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் குடிநீருக்கு தட்டுப்பாடு: பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

இமாச்சல் பிரதேசம்: இமாச்சல் பிரதேசம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலம் வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அந்த பாலத்தின் சிரூமா ஊர் பகுதியில் உள்ள கோயிலுக்கு அருகே இருக்கும் அருவியில் வெள்ளம் ஏற்பட்டது. கோயிலை சூழந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மட்டுமின்றி நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டி அருகே சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலை வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பலர் குறுகிய சாலைகள் கொண்ட பகுதிகளில் உள்ள நிலையில் அந்த இடங்களுக்கு சிறிய லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குலுமணாலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்களை அங்கிருந்து திரும்ப முடியாமல் சிக்கி இருக்க கூடும் தெரிகிறது. விடுதிகள், ஓட்டல்களில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகளின் விவரங்களை அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

The post இமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் குடிநீருக்கு தட்டுப்பாடு: பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Imachal Pradesh ,Himachal Territories ,Dinakaran ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...