×

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி; பாஜகவுக்கு கடும் பின்னடைவு..!!

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8ம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாதுகாப்பு பணியில் 65,000 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கு வங்க மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் நடந்த அன்றும் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில், சுமார் 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1629 பஞ்சாயத்துக்களில் முன்னிலை பெற்றது. பாஜக 364 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 362 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 118 பஞ்சாயத்துகளிலும் முன்னிலை பெற்றன. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 2,712 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

பாஜகவுக்கு பின்னடைவு:

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 1,714 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 362 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 215 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

The post மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி; பாஜகவுக்கு கடும் பின்னடைவு..!! appeared first on Dinakaran.

Tags : Trinamul Congress ,West ,Indies elections ,Bajagu ,West Bengal ,West Indies elections ,Dinakaran ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை