×

8 வயது கெட்டிக்காரி!

அர்ஷியா கோஸ்வாமி… இந்தப் பெயர்தான் தற்போது இணையத்தில் வைரல். எட்டு வயதே ஆன சிறுமி அர்ச்சனா தனது 6 வயதிலேயே 45 கிலோ பளு தூக்கி உலகிலேயே மிகக் குறைந்த வயது பளு தூக்கும் வீராங்கனையாக 2021ல் அறியப்பட்டார். ஹரியானா மாநிலம், பாஞ்ச்குலாவைச் சேர்ந்த அர்ஷியா தற்போது தனது எட்டு வயதில் 60 கிலோ எடை தூக்கி மீண்டும் மற்றுமொரு வரலாற்றை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் 65 கிலோ எடையை அவ்வளவு சுலபமாக தூக்கி கீழே இறக்கி விட்டு, மழலை நடையில் அர்ஷியா நடந்து செல்லும் வீடியோ அது. அவர் தூக்கிய எடையுடன் இணைய உலகின் இதயங்களையும் சேர்த்துத் தூக்கிச் செல்வது போல் உள்ளது அந்த வீடியோ.

 

The post 8 வயது கெட்டிக்காரி! appeared first on Dinakaran.

Tags : Ketikari ,Arshiya Goswami… ,Archana ,Dinakaran ,
× RELATED சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாஜவில் தஞ்சம்