நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மாணவர்கள் அனைவருக்கும் மர்ம காய்ச்சல் பரவியதால் அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. திருச்சங்கோடு தாலுக்காவில் குப்பாண்டம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இடையாறு பாளையம் பகுதியில் ராட்சி வரியா தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியை சாந்திக்கு சமீபத்தில் உடல் நல குறைவு ஏற்பட்டது. அவரை தொடர்ந்து 2 ஆசிரியைகள் மற்றும் 17 மாணவ, மாணவிகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் காய்ச்சல் பரவியதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதே போல அங்கன்வாடியில் உள்ள 12 குழந்தைகளுக்கும் மர்ம காய்ச்சல் பரவியதால் பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பவில்லை. தகவல் அறிந்து வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே காய்ச்சலுக்கான காரணம் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post நாமக்கல்லில் பள்ளி, அங்கன்வாடியில் 30 பேருக்கு மர்ம காய்ச்சல்: பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை appeared first on Dinakaran.