×

நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டரில் சென்ற 6 பேரும் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டரில் சென்ற 6 பேரும் உயிரிழந்தனர். எவரெஸ்ட் சிகரம் அருகே சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிட நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 5 வௌிநாட்டினர் உட்பட 6 பேருடன் சென்ற மனாங் ஏர் நிறுவன ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. அந்த ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. தற்போது மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வந்தது வந்தது.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரி ஞானேந்திர புல் கூறுகையில், ‘சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் இன்று காலை 10.12 மணியளவில் கட்டுப்பாட்டுக் அறையுடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது.

மாயமான ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டவர்கள் உள்பட ஆறு பேர் பயணித்தனர். இவர்களில் ஹெலிகாப்டர் பைலட் தவிர 5 பேரும் வெளிநாட்டவர்கள். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் இமயமலை அருகே விபத்துக்குள்ளாகி, நொறுங்கி விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

The post நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டரில் சென்ற 6 பேரும் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Everest Peaks ,Dinakaran ,
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...