×

சீர்காழி அருகே மழையில் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு இழப்பீடு தர கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்..!!

 

 

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் மழையில் நனைந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு திங்கட்கிழமை தோறும் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு பருத்திக்கு குறைந்த பட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனை அடுத்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.10,000 நிர்ணயிக்க கோரியும் விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்திக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்வது குறித்து பேசிய வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரை கடிதத்தின் பேரில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்று தெரிவித்தனர். 3 நாட்களுக்கு மேலாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை எனவும் பருத்தி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

The post சீர்காழி அருகே மழையில் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு இழப்பீடு தர கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Sirgarhu Mayaladudura ,Siraksha ,
× RELATED சீர்காழி அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது