×

கணவர் மாயம்: மனைவி புகார்

 

ஈரோடு, ஜூலை 11: ஈரோடு மாவட்டம், கோபி பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவர் மகன் ரஞ்சித் (22). இவருக்கும் இவரது மனைவி தீபாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4ம் தேதி வழக்கம்போல் ரஞ்சித்திற்கும், தீபாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனவேதனை அடைந்த ரஞ்சித் அன்றைய தினம் இரவே வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரஞ்சித் கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தீபா கோபி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

The post கணவர் மாயம்: மனைவி புகார் appeared first on Dinakaran.

Tags : Erode ,Ranjith ,Kumar ,Kobi Pariyur Nanjagaundampalayam, Erode District.… ,Mayam ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை