×

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

பரமக்குடி, ஜூலை 11: பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார அலுவலகத்தின் முன்பு, மாவட்ட துணைத் தலைவியை ரீட்டா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். குறுமைய ஊழியர்கள் 10 வருடம் பணியாற்றிய உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம செவிலியர் பயிற்சி முடித்துள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அங்கன்வாடி பணியாளர் ராசாத்தி நன்றி கூறினார்.

The post அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Paramakkudy ,Nayanarko ,Dinakaran ,
× RELATED பரமக்குடி நகர்மன்றத்துக்கு நிரந்தர...