×

குரு பூர்ணிமா நிகழ்ச்சி

 

ராமேஸ்வரம், ஜூலை 11: ராமேஸ்வரம் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்சியில் பெற்றோர்களுக்கான மாத்ரு பூஜை நடைபெற்றது. நீலகண்ட அமிர்த சைதன்யா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் இந்திரா தேவி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியையொட்டி பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வகையில் மாணவர்கள் தாய், தந்தையர்களின் பாதங்களை கழுவி மலர் தூவி பூஜை செய்து வழிபட்டனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேன்மை நிலையை அடைய வேண்டும் என்று ஆசிர்வதித்து வாழ்த்தினர். பெற்றோர் குழந்தைகள் உறவை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

The post குரு பூர்ணிமா நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Guru Purnima Show ,Rameswaram ,Guru Purnima ,Rameswaram School ,
× RELATED அச்சம் தரும் ரயில்வே குடியிருப்பு சீரமைக்க ஊழியர்கள் வலியுறுத்தல்