×

திருப்பூர் 45வது வார்டில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

 

திருப்பூர், ஜூலை 11: திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 45வது வார்டுக்கு உட்பட்ட பூலவாரி சுகுமார் நகர் பகுதியில் ‘இல்லம் தேடி எம்எல்ஏ என்ற திட்டத்தின் கீழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை அகற்றிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை தெரிவித்தார்கள்.

அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். கழிவுநீர் வடிகால் வசதியில்லாத பகுதிகளில் விரைவில் பணிகளை மேற்கொள்ளவும், குப்பை குவியாமல் தினமும் அள்ளுவதற்கு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார். இந்த ஆய்வின் போது திமுக திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர் உசேன், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மஸ்ஊது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் 45வது வார்டில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Tirupur ,Tirupur South Constituency ,K. Selvaraj ,South Assembly Constituency ,Tirupur 45th Ward ,
× RELATED உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்