×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் ஈமச்சடங்கு குளியல் அறைகள் சேதம்: பெண்கள் கடும் அவதி

 

பள்ளிப்பட்டு, ஜூலை 11: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் ஈமச்சடங்கு நடைபெறும் பகுதியில் உள்ள குளியலறைகள் சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களை நகரி சாலையில் உள்ள பொதுமயானத்தில் இறுதிச்சடங்கு செய்துவிட்டு, பின்னர் அருகில் உள்ள லட்சுகான் குளக்கரை பகுதியில் ஈமச்சடங்கு செய்வது வழக்கம். ஈமச்சடங்கு செய்யும் இடத்தில் உள்ள ஒரே குளியல் அறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளித்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குளக்கரையை மேம்படுத்தி ஆண், பெண்களுக்கு தனித்தனியாக குளியலறைகள் அமைக்கப்பட்டன. இதனால் இறுதிச்சடங்கு மற்றும் ஈமச்சடங்கின்போது குளிக்க வசதியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் ஈமச்சடங்கு நடக்கும் பகுதியில் உள்ள குளியல் அறைகள் முறையாக பராமரிக்கவில்லை.

குடிமகன்கள் குளியல் அறைகளை சேதப்படுத்தியதால், பெண்கள் குளிக்கும் அறைகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் ஈமச்சடங்கில் பங்கேற்கும் பெண்கள் குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் குளியல் அறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் ஈமச்சடங்கு குளியல் அறைகள் சேதம்: பெண்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Eemachatang ,Bodaturpet Municipality ,Pallipattu ,Eemachadanga ,Pothatturpet ,Thiruvallur District Pothatturpet ,Pothatturpet Municipality ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு