×

இங்கிலாந்து மன்னர் சார்லசை சந்தித்தார் அதிபர் பைடன்

விண்ட்சர்: அமெரிக்க அதிபர் பைடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அங்குள்ள விண்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லசை அவர் சந்தித்து பேசினார். அப்போது காலநிலை தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அமெரிக்க தூதர் ஜான் கெர்ரி கலந்து கொண்டார். இங்கிலாந்து மன்னராக சார்லஸ் பதவி ஏற்ற விழாவில் பைடன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் மன்னர் சார்லசை நேற்று விண்ட்சர் கோட்டையில் வைத்து முறைப்படி அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்த சந்திப்பு பற்றி கூறுகையில்,’ காலநிலை பிரச்சினையில் மன்னர் சார்லசின் அர்ப்பணிப்பு முயற்சியை அதிபர் பைடன் பாராட்டினார்’ என்றார்.

The post இங்கிலாந்து மன்னர் சார்லசை சந்தித்தார் அதிபர் பைடன் appeared first on Dinakaran.

Tags : President Biden ,King Charles ,England ,Windsor ,US ,Windsor Castle ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை