×

கவர்னர் ரவியை நீக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை நியாயமானது: கபில் சிபல் கருத்து

புதுடெல்லி: தமிழ்நாடு கவர்னரை நீக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை நியாயமானதாகும் என்று கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சீர்குலைக்கவும்,நிர்வாகத்துக்கு இடையூறு செய்யும் வேலைகளை கவர்னர்கள் செய்கின்றனர். தமிழ்நாடு கவர்னர் ரவியின் செயல்பாடுகள் பாரபட்சம் காட்டுவதாக இருப்பதால் கவர்னர் பதவி வகிக்க தகுதியற்றவர். மத வெறுப்புகளை துாண்டி விடுவதால் மாநிலத்தின் அமைதிக்கு அவர் அச்சுறுத்தலாக உள்ளார்.

உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் தகுதியானவர் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இது பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் ஒன்றிய அமைச்சரும் எம்பி.யுமான கபில் சிபல் டிவிட்டரில் பதிவிடுகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில கவர்னர்கள் இந்துத்வா கொள்கையை செயல்படுத்துதல், அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி சீர்குலைப்பது மற்றும் வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் கவர்னரை நீக்க வேண்டும் என்ற ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை விடுத்திருப்பது நியாயமானதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

The post கவர்னர் ரவியை நீக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை நியாயமானது: கபில் சிபல் கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Governor Ravi ,Kapil Sibal ,New Delhi ,M.K.Stalin ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்