
புதுடெல்லி: ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் தேர்தல் கமிஷன் வழங்கியதை எதிர்த்து உத்தவ் அணி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. விரைவில் தேர்தல் வர இருப்பதால் இந்த மனு மீது விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு ஆஜரான உத்தவ் அணி வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். அப்போது, இந்த மாதம் 31ம் தேதி விசாரணை நடக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post சிவசேனா வழக்கு 31ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.