×

3வது டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு இது நல்ல வெற்றி: ஸ்டோக்ஸ் உற்சாகம்

லீட்ஸ்: ஆஷஸ் தொடரில் ஆஸ்திரலேியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கிடைத்த வெற்றி ‘தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளதால் இது நல்ல வெற்றி’ என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் லீட்ஸ் நகரில் நடந்தது. ஆஸி முதல் இன்னிங்சில் 263, 2வது இன்னிங்சில் 224ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கி, முதல் இன்னிங்சில் 237ரன் எடுத்தது. தொடர்ந்து 250 பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 4வது நாளே 254ரன் என இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

எனினும் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரில், ஆஸி 1-2 என்ற கணக்கில் முன்னிலையை தொடர்கிறது. இது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ‘முதல் 2 டெஸ்ட்களில் நாங்கள் திட்டமிட்டபடி முடிவை எட்டவில்லை. அதனால் பின்தங்கினோம். இந்த சூழலில் 3வது டெஸ்ட்டின் வெற்றி அசாதாரணமானது. தொடரை வெல்வதற்கான வாய்ப்பை இந்த வெற்றி தக்க வைத்துள்ளதால் இது நல்ல வெற்றி. மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.’ என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ், ‘விளையாட்டில் பொதுவாக வெற்றி, தோல்வி என 2பக்கமும் இருக்கும். இங்கிலாந்து பயணத்தில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் என தொடர்ந்து 3 ஆட்டங்களில் வென்றோம். இந்த ஆட்டத்திலும் சரியாக விளையாடினோம். எனினும் தவறுகளை ஆராய்வோம். அதை விட முக்கியமானது அடுத்த டெஸ்ட் ஆட்டத்துக்கு தயாராவது தான்’ என்று கூறியுள்ளார். இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் ஜூலை 19ம் தேதி மான்செஸ்டரிலும், 5வது டெஸ் ஜூலை 27ம் தேதி லண்டனிலும் தொடங்க உள்ளன.

The post 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு இது நல்ல வெற்றி: ஸ்டோக்ஸ் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : England ,Stokes ,Leeds ,Ashes ,Australia ,Stokes cheers' ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை