×

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் போபண்ணா இணை

லண்டன்: விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடக்கிறது. அதன் ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா(43வயது) களமிறங்கினார். அவருடன் இணை சேர்ந்திருந்த ஆஸி வீரர் மாத்யூ எப்டன் (35வயது) ஆகியோர், கிரேட் பிரிட்டனின் ஜேகப் ஃபியர்னலி(21வயது, ஜோன்னஸ் மேன்டே(21வயது) ஆகியோருடன் மோதினர். அதில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா இணை ஒரு மணி 9 நிமிடங்களில் 7-5, 6-3 என நேர் செட்களில் பிரிட்டன் இணையை வீழ்த்தியது. அதனால் போபண்ணா, மாத்யூ இணை காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறியது.

மிரட்டிய இளம்புயல்: ரஷ்யாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா(16வயது, 102வது ரேங்க்) தகுதிச்சுற்று மூலம் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன்னில் களமிறங்கினார். தகுதிச் சுற்றில் 3 ஆட்டங்களில் வென்ற மிர்ரா, முதன்மை சுற்றில் முதல் 3 ஆட்டங்களில் சீனாவின் ஜியூ வாங்(22வயது, 65வது ரேங்க்), செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா(27வயது, 11வது ரேங்க்), ரஷ்யாவின் அனஸ்டசியா போடபோவா(22வயது, 23வது ரேங்க்) ஆகியோரை வீழ்த்தினார்.

தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் நேற்று அமெரிக்காவின் மேடிசன் கீஸ்(28வயது, 18வது ரேங்க்) உடன் மோதினார். முதல் செட்டை மிர்ரா 6-3க்கு என்று வெல்ல எதிர்பார்பை ஏற்படுத்தினார். டை பிரேக்கர் வரை 2வது செட்டை மேடிசன் 7-6(7-4) என போராடி வென்றார். அதே வேகத்தில் 3வது செட்டையும் மேடிசன் 6-2 என எளிதில் வசப்படுத்தினார். அதனால் மேடிசன் 2மணி 3நிமிடங்களில் 2-1 என்ற செட்களில் இளம்புயல் மிர்ராவை வீழ்த்தி காலிறுதிக்கும் முதல் வீராங்கனையாக நுழைந்துள்ளார்.

The post விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் போபண்ணா இணை appeared first on Dinakaran.

Tags : Bopanna ,Wimbledon ,London ,Wimbledon Open Grand Slam ,London, England ,Adeavor ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை