×

கனடா ஓபன் பேட்மின்டன்: லக்‌ஷயா சென் சாம்பியன்

கல்காரி: கனடா ஓபன் பேட்மின்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் பிரிவில் சிந்து 3வது இடம் பிடித்தார். கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மின்டன் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லஷ்யா சென்(21வயது, 19வது ரேங்க்), சீன வீரர் ஷி ஃபெங் லீ(23வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோதினர். மலேசியா ஓபனில் எச்.எஸ்.பிரணாய் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பல போட்டிகளில் இந்தியர்கள், இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதில் தடுமாற்றம் நீடித்தது.

இந்நிலையில் லக்‌ஷயா சென் முன்னேற்றத்தால், இந்த இறுதி ஆட்டம் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு ஏற்ப சீன வீரர் லீயின் சவாலை சமாளித்த சென் அசத்தலாக விளையாடிய 21-18, 21-20 என்ற புள்ளிக்கணக்கில் 2செட்களையும் கைப்பற்றினார்.அதனால் 50நிமிடங்கள் நீடித்த இறுதி ஆட்டத்தை 2-0 என்ற நேர் செட்களில் வென்ற சென் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

மகளிர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்துவை வீழ்த்திய ஜப்பானின் அகனே யாமகுச்சி, இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சோனோக் இன்டனானை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். பி.வி.சிந்துக்கு 3வது இடம் கிடைத்தது.

The post கனடா ஓபன் பேட்மின்டன்: லக்‌ஷயா சென் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Canada Open Badminton ,Lakshya Sen ,Calgary ,India ,Sindhu ,Dinakaran ,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென்