×

அமெரிக்க வாழ் இந்தியரிடம் ரூ.15 லட்சம் மோசடி நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரிடம் 1 மணிநேரம் விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: அமெரிக்க வாழ் இந்தியரிடம் ரூ.15 லட்சம் பெற்று ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக, சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் வாழும் விஜய் என்பவர் இந்த புகாரை கூறியிருந்தார். நான் கொடுத்த ரூ.15 லட்சம் குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டால், இணைப்பை துண்டித்து செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன்படி ரூ.15 லட்சம் மோசடி தொடர்பாக ரவீந்தர் நேரில் வந்து ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று மதியம் தயாரிப்பாளர் ரவீந்தர் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அமெரிக்க வாழ் இந்தியரிடம் பணம் பெற்றது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் வந்து ஆஜராகும்படி கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

The post அமெரிக்க வாழ் இந்தியரிடம் ரூ.15 லட்சம் மோசடி நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரிடம் 1 மணிநேரம் விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : US ,Mahalakshmi ,Chennai ,Makalakshmi ,
× RELATED போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம...