×

திருமலையில் ப்ரீபெய்ட் டாக்ஸி சேவை தொடங்க ஆய்வு

திருமலை: திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், செயல் அதிகாரி தர்மா பேசியதாவது: மலைப்பாதை சாலையில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து 100 சதவீதம் கண்காணிப்பை அதிகப்படுத்தி, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், பக்தர்களின் வசதிக்காக, அலிபிரி அருகே வாகன நிறுத்துமிடத்தைக் கண்டறிந்து, ஓட்டுனர்களுடன் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருமலையில் ப்ரீபெய்ட் டாக்ஸி சேவைகளை தொடங்க ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மலைப்பாதையில் தொடர் விபத்து ஏற்படும் வாகனங்களை கண்டறிந்து மலைப்பாதை சாலைகளில் செல்ல தடை விதிக்க வேண்டும். மலைப்பாதை சாலைகளில் கண்காணிக்க தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு சாவடிகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருமலையில் ப்ரீபெய்ட் டாக்ஸி சேவை தொடங்க ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirumalaya ,Tirumalai ,Devasthan Administrative Office ,Tiruppati ,Officer ,Dharma ,Tirumalay ,
× RELATED மாணவிகள் சாதனை படைக்க வேண்டும்