×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஒருவர் பலி; 10 பேர் காயம்

இம்பால்: மணிப்பூரில் நடந்த துப்பாக்கிசூட்டில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார்.10 பேர் படுகாயமடைந்தனர். மணிப்பூரில் வசிக்கும் மெய்டீஸ் சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு, பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர வன்முறை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2 மாதத்துக்கும் மேல் நீடிக்கும் மோதலில் 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு காங்போக்பி மாவட்டம்,காங்சுப் பகுதியில் கிராம மக்கள் மீது திடீரென துப்பாக்கிசூடு நடந்ததில் ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயமடைந்தனர்.

வன்முறைக்கு வழக்குகள் தூபம் போடக் கூடாது உச்ச நீதிமன்றம் கருத்து

இதனிடையே மணிப்பூர் வன்முறைகள் தொடர்பான பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘மாநிலத்தில் ஏற்கெனவே வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வன்முறைகளுக்கு தூபம் போடுவதுபோல் இங்கு நடைபெறும் வழக்கு விசாரணைகளைக் காரணமாக்கி விடக்கூடாது. நாங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்போ அல்ல பாதுகாப்பு வழங்கும் அமைப்பு அல்ல’’ என்று தெரிவித்தார்.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஒருவர் பலி; 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...