×

செய்திகள் வாசிப்பது லிசா ஒடிசா டிவி சேனலில் ஏஐ தொகுப்பாளர் அறிமுகம்

புவனேஸ்வர்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒடிசாவில் உள்ள ஓடிவி டிவியில் லிசா என்ற ஏஐ தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளனர். ஒடிசாவில் ஓடிவி என்ற செய்தி சேனல் உள்ளது. இந்த சேனலில் நேற்று முன்தினம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ மூலம் லிசா என்ற தொகுப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டார். ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் லிசா புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

லிசாவை பார்க்க அசல் செய்தி வாசிப்பாளர் போலவே உள்ளது. இது செய்தி ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல்வேறு மொழிகளில் செய்தி வாசிக்கும் திறனும் லிசாவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசாவில் 25 ஆண்டுகளாக செயல்படும் ஓடிவி சேனலின் டிஜிட்டல் வர்த்தக பிரிவு தலைவர் லித்திஷா கூறுகையில்,“லிசா, மனிதர்களை போல சரளமாக இன்னும் பேச தொடங்கவில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு திறனை கொண்டு செய்தி வாசிக்கிறது. இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

* இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஆஜ்தக் டிவிக்காக சனா என்கிற ஏஐ அறிமுகம் செய்யப்பட்டது.

* குவைத் நியூஸ் சார்பில் பெதா என்ற ஏஐ அறிமுகம் செய்யப்பட்டது.

The post செய்திகள் வாசிப்பது லிசா ஒடிசா டிவி சேனலில் ஏஐ தொகுப்பாளர் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : News ,Lisa ,Odisha TV Channel ,Bhubaneswar ,OTV TV ,Odisha ,Lisa.… ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்