×

சண்ட போட்டுக்குறாங்க…அப்புறம் அக்கா-தம்பிங்குறாங்க…அண்ணாமலையை விமர்சித்த வானதி சீனிவாசன் அந்தர் பல்டி: பாஜவில் புதுசாக முளையும் சகோதர பாசம்

கோவை: நானும் அண்ணாமலையும் அக்காள், தம்பி போன்றவர்கள் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார். கோவை ராம்நகர் பகுதியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பாஜ தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அளித்த பேட்டி: ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது அவர்கள் வரம்பை மீறி போவதில்லை. எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நானும் அண்ணாமலையும் அக்காளும் தம்பியும் போன்றவர்கள். இருவரும் சேர்ந்து கட்சியை வளர்த்து வருகிறோம். கோவை எம்பி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கட்சி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் அண்ணாமலையிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக தலைவர்களின் குடும்ப பெண்களை பற்றி பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதுதொடர்பாக பேட்டியளித்த பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனும், பெண்கள் பற்றி பேசியது தவறுதான் என்று அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து தற்போது அண்ணாமலையும் நானும் அக்கா-தம்பி என்று அந்தர் பல்டியடித்துள்ளார்.

இதேபோலத்தான் புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை அரசு விவகாரத்தில் தலையிடுவது பற்றி முதல்வர் ரங்கசாமி, ‘முதல்வர் பதவியில் இருந்தும் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை’ என்று விரக்தியுடன் தன்னை சந்திக்க வந்த நர்ஸ்களிடம் புலம்பியுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழிசை அளித்த பேட்டியில் நானும் முதல்வர் ரங்கசாமியும் அண்ணன்- தங்கை போன்றவர்கள் என்று கூறினார். பா.ஜ.க ஓ.பி.சி அணி செயலாளர் சூர்யா சிவா மற்றும் சிறுபான்மையினர் அணி மாநில தலைவி டெய்சி ஆகியோர் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக காதில் கேட்க கூடாத ஆபாச வார்த்தைகளால் வாக்குவாதம் செய்து கொண்டனர். இதில் சூர்யா சிவா படுகேவலமாக பேசினார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் நிருபர்களை சந்தித்து நாங்கள் இருவரும் அக்கா-தம்பி என்று பேட்டியளித்தனர். இப்படி, ஒவ்வொரு முறையும் ஆபாசமாக பேசி சண்டை போடும் நிர்வாகிகள், பின்னர் சகோதர பாசத்தை பொழிந்து பிரச்னையை மூடி மறைக்கின்றனர்.

The post சண்ட போட்டுக்குறாங்க…அப்புறம் அக்கா-தம்பிங்குறாங்க…அண்ணாமலையை விமர்சித்த வானதி சீனிவாசன் அந்தர் பல்டி: பாஜவில் புதுசாக முளையும் சகோதர பாசம் appeared first on Dinakaran.

Tags : Santu Pottukkiranga ,Akka-Thambingiranganga ,Sainivasan Andar Baldi ,Baja ,Govai ,Annamal ,Lord ,Sainivasan ,MLA ,Government of Ramnagar ,Gov ,Annamalayam ,Akka-Thampingiranga ,
× RELATED சொல்லிட்டாங்க…