×

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பதற்காக வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் கவலையுடன் காத்திருக்கும் விவசாயிகள்

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பதற்காக சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கும்பகோணம் மற்றும் அதனை சுற்றுலா பருத்தி விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்யும் பருத்தியை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பது வழக்கம் நாளை இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளது.

இதற்காக தங்கள் விளைவித்த பருத்தியை விற்க வாகனங்கள் உடன் விவசாயிகள் நீட வரிசையில் காத்திருக்கின்றனர். பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைப்பதால், இந்த முறை கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருப்பதால் தமிழக பருத்திக்கான தேவை குறைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் நல்ல விலைக்கு கிடைக்குமா என்ற கவலையில் பருத்தி விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

The post கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பதற்காக வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் கவலையுடன் காத்திருக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Regulation Hall ,Kumbakonam ,Kumbakonam… ,Dinakaran ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...