×

12 ஆண்டுக்கு பின் டொமினிகாவில் டிராவிட்டுடன் புதிய கூட்டணி: விராட் கோஹ்லி நெகிழ்ச்சி

டொமினிகா: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இ்ண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒன்டே மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (12ம்தேதி) டொமினிகா ரோசோ மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டொமினிகா மைதானத்தில் கடைசியாக 2011ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆடியது. டிராவில் முடிந்த அந்த டெஸ்ட்டில் விளையாடிய வீரர்களின் விராட் கோஹ்லி ஒருவர் மட்டுமே தற்போது அணியில் உள்ளார். மற்றொரு வீரரான டிராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார்.

இதுபற்றி விராட் கோஹ்லி, டொமினிகா மைதானத்தில் ராகுல்டிராவிட்டுடன் தற்போது உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில், 2011ல் டொமினிகாவில் நாங்கள் விளையாடிய கடைசி டெஸ்டில் ஆடிய இரண்டு பேர் மட்டுமே தற்போது அங்கம் வகிக்கிறோம். இந்தப் பயணம் எங்களை வெவ்வேறு திறன்களில் மீண்டும் இங்கு கொண்டு வரும் என்று நினைத்துப் பார்த்ததில்லை என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

The post 12 ஆண்டுக்கு பின் டொமினிகாவில் டிராவிட்டுடன் புதிய கூட்டணி: விராட் கோஹ்லி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dravid ,Dominica ,Virat Kohli ,West Indies ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...