×

உலக கோப்பை கிரிக்கெட் இன்னும் 86 நாள்

உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் மூலம் மட்டும் அதிக ரன் எடுத்தவர்களில் நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார். 2015ல் வெலிங்டனில் வெஸ்ட்இண்டீக்கு எதிரான போட்டியில் அவர் 24 பவுண்டரி, 11 சிக்சர் என 162 ரன் விளாசி உள்ளார். வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் அதே தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக 16 சிக்சர், 10 பவுண்டரி என 136 ரன்னும், இங்கிலாந்தின் மோர்கன் 2019ல் ஆப்கனுக்கு எதிராக 17 சிக்சர், 4 பவுண்டரியுடன் 118, தென்ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 2015ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 17 பவுண்டரி, 8 சிக்சருடன் 116, இந்தியாவின் கங்குலி 1999ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 17 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்னும் விளாசி டாப் 5 இடத்தில் உள்ளனர்

The post உலக கோப்பை கிரிக்கெட் இன்னும் 86 நாள் appeared first on Dinakaran.

Tags : Cricket World Cup ,Zealand ,Martin ,World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...