×

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஸ்வியாடெக், ஸ்விடோலினா கால் இறுதிக்கு தகுதி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ரவுண்ட் 16 சுற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் 22 வயது இகா ஸ்வியாடெக், 14ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் 26 வயது பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் முதல் செட்டை 7(7)-6(4) என பெலிண்டா கைப்பற்றிய நிலையில் 2வது செட்டை 7(7)-6(2) என கைப்பற்றி ஸ்வியாடெக் பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அதிரடி காட்டிய ஸ்வியாடெக் 6-3 என தன்வசப்படுத்தினார். முடிவில் 6(4)-7(7), 7(7)-6(2), 6-3 என ஸ்வியாடெக் வெற்றிபெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில், பெலாரசின் 33 வயதான விக்டோரியா அசரென்கா, உக்ரைனின் 28 வயதான எலினா ஸ்விடோலினா மோதினர். இதில் 2-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினா வெற்றிபெற்று கால்இறுதிக்கு தகுதிபெற்றார். ஸ்வியாடெக்குடன் கால்இறுதியில் ஸ்விடோலினா பலப்பரீட்சை நடத்த உள்ளார். அமெரிக்காவின் ஜெகிகா பெகுலா, செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா ஆகியோரும் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். கால்இறுதியில் இவர்கள் நாளை மோத உள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில், இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-6, 6-4, 6-3 என கொலம்பியாவின் டேனியல் எலாஹிகாலனை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் ரோமன் சஃபியுலின்,ஆண்ட்ரி ரூப்லெவ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதிபெற்றனர். நடப்பு சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் மோதிய போட்டியில் ஜோகோவிச், 7-6,7-6 என 2 செட்டை கைப்பற்றிய நிலையில் மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது.

The post விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஸ்வியாடெக், ஸ்விடோலினா கால் இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Wimbledon Tennis Series ,Sviatek ,London ,Grand Slam ,Svitolina ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை