×

மீஞ்சூர் அருகே காட்டூரில் பழங்குடி மக்களுக்கு சிறப்பு மனுநீதி முகாம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் அருகே காட்டூரில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான சிறப்பு மனுநீதி முகாம் காட்டூரில் உள்ள லட்சுமியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இம்முகாமில், புதிய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், ஜாதி சான்றிதழ் உள்பட பல்வேறு அரசு சான்றிதழ் வழங்குவதற்கான பழங்குடி கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் அந்த மனுக்கள்மீது உரிய பரிசீலனை செய்து, அதற்கான சான்றிதழ்கள் விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்முகாமை காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராமன், வருவாய் ஆய்வாளர் சஞ்சீவி பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார், நல்லீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் காட்டூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று, தங்களின் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மனுக்கள் வழங்கினர். இம்மனுக்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார்.

The post மீஞ்சூர் அருகே காட்டூரில் பழங்குடி மக்களுக்கு சிறப்பு மனுநீதி முகாம் appeared first on Dinakaran.

Tags : Kattur ,Meenjoor ,Ponneri ,Ponneri taluka ,Tiruvallur district ,
× RELATED மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து...