×

டெல்லியில் யமுனை நதியில் கடும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

டெல்லி: டெல்லியில் யமுனை நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பாட்டுக்குள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து யமுனை நதியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியின் யமுனையில் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகவும், அபாயக் குறி 205.33 மீட்டராகவும் உள்ளது. இதற்கிடையில், கனமழை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் டெல்லியில் யமுனை நதி 203.58 மீட்டர் உயர்ந்துள்ளது. இது நாளை காலை 205.5 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், யமுனையில் நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்று வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. யமுனா நதியில் நீர்மட்டம் 206 மீட்டர் அளவை கடந்தால், ஆற்றின் கரையோரங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தொடங்குவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

The post டெல்லியில் யமுனை நதியில் கடும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Yamuna River ,Delhi ,Haryana ,Hadnikund ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்