×

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும்: தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தரமோகன் அமர்வு உத்தரவிட்டது. 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழக்குகளை கையாளும் நீதிபதிகள் டிஜிபிக்கு உத்தரவிட்டனர். தருமபுரியில் இளவயது திருமண புகாருக்குள்ளான இருவர் நடத்தப்பட்ட விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என குறிப்பிட்டனர். சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

The post பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும்: தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu DGB ,Chennai ,Chennai High Court ,Nadu ,DGB ,TN ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...