×

ரூ.55 லட்சத்தில் புதிய பைக்: இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் பிஎம்டபிள்யூ நிறுவனம், எம் 1000 ஆர்ஆர் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.49 லட்சம் எனவும், காம்படிஷன் வேரியண்ட் சுமார் ரூ.55 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 999 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 14,500 ஆர்பிஎம்-ல் 212 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 3.1 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 314 கிமீ வேகம் வரை செல்லலாம். 7 ரைடிங் மோட்கள் உள்ளன. ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளது. இவற்றை இதிலுள்ள 6.5 அங்குல வண்ண டிஎப்டி டேஷ் போர்டு மூலம் கட்டுப்படுத்தலாம்.

The post ரூ.55 லட்சத்தில் புதிய பைக்: இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ appeared first on Dinakaran.

Tags : BMW ,India ,BMW Company ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!