×

ரயிலில் தள்ளி விட்டு கல்லூரி மாணவி கொலை: கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை: கடந்த ஆண்டு இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செத்தவர் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது.

தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சத்யாவை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கல்லூரிக்கு செல்வதற்காக இன்று வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யா அங்கு ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ், திடீரென தாம்பரத்தில் இருந்து வந்து மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் சத்யா ரயிலில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சதீஷ் கைது செய்யப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையின்போது பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில் தன்னை சட்டவிரோதமாகவும், அடிப்படை உரிமையை மீறியும் குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக சதீஷ் தரப்பில் கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சதீஷ் தரப்பில் கைது உத்தரவு தொடர்பாக வழங்கப்பட்ட ஆவணங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவல்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்பட்டது. எனவே இதனடிப்படையில் குண்டர் சட்டத்தினை ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக காவலத்துறையினர் போதிய விளக்கம் அளிக்காததால் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ரயிலில் தள்ளி விட்டு கல்லூரி மாணவி கொலை: கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...