×

காயலில் சுற்றுலா படகு சவாரிக்கு எதிர்ப்பு மணக்குடியில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்-போலீசார் பேச்சுவார்த்தை

சுசீந்திரம் : மணக்குடி காயலில் சுற்றுலா படகு சவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.குமரி மாவட்டம் மேல மணகுடி மீனவ கிராமத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். குறிப்பாக புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட மணக்குடி காயலில் மீனவர்கள் மீன்பிடிப்பார்கள். ஆனால் மணக்குடி காயலில் தனியார் சுற்றுலா படகுதளம் அமைக்கப்பட்டு படகு சவாரி நடந்து வருகிறது. சுற்றுலா படகில் பலரும் செல்வதால் தினந்தோறும் படகு சவாரி நடந்து வருகிறது.

இந்த சுற்றுலா படகு சவாரியால் மணக்குடி காயலில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா படகுதளம் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சுற்றுலா படகு தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை பாஜ மீனவர் பிரிவு மாநில செயலாளர் சகாயம் தலைமையில் 10 படகுகளில் மீனவர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமாரி டிஎஸ்பி ராஜா மற்றும் ராஜாக்கமங்கலம் ஆய்வாளர் கண்ணன், புத்தளம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி ஆகியோர் விரைந்து வந்தனர்.

அப்போது அங்கு போராட்டம் நடத்த வந்தவர்களை காயலில் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுலா படகு சவாரி குறித்து கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post காயலில் சுற்றுலா படகு சவாரிக்கு எதிர்ப்பு மணக்குடியில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்-போலீசார் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Manakudi ,Suchindram ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...