×

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, தணிக்கைத்துறை அறிவுறுத்தலின்படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம், தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையை ரத்து செய்யக்கோரியும், புகார் மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இவர்கள் இருவரும் விசாரணைக்காக சைதாப்பேட்டை உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையின்போது ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு தம்நிக்கை மேற்கொள்ளப்பட முடியாது எனவும் புகார் அளிப்பதற்கு முன்பாக தன்னிடம் எந்தவொரு விளக்கமும் கேட்கப்படவில்லை என இருதரப்பிலும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மாதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Dhanush ,Aiswarya ,Chennai ,Aishwarya ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...