×

சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் முதல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்வதும் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,460க்கும், சவரன் ரூ.43,680க்கும் விற்பனையானது. கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.5,457-க்கு விற்பனையானது. 8ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,495க்கும், சவரன் ரூ.43,960க்கும் விற்பனைசெய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.304 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,485-க்கும், சவரன் ரூ.43,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் அதிகரித்து ரூ.76.80-க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The post சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,kushi ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை