×

பச்சை குதிரை விளையாடும் சிறுவர்கள் திருமயம் அருகே ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

 

திருமயம்,ஜூலை 10: திருமயம் அருகே நடைபெற்ற ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி கிராமத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டினர் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கோயில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கோயில் முன்பாக யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 6ம் தேதி மாலை 5 மணி அளவில் ஆச்சார்யா வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அடுத்த நாள் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா நவகம் கலச பூஜை, உச்ச பூஜை, பகவதி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சனிக்கிழமை பலிகல் பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று காலை கணபதி ஹோமத்துடன் சரியாக 8 மணி அளவில் கலசாபிஷேகம் ஐயப்பன், தேவி, கணபதி, நாகதேவி, நவக்கிரகம் ஆகிய தெய்வங்களின் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடையே இன்று (10ம் தேதி) காலை கணபதி ஹோமம், மாலை பள்ளி வேட்டை, பூத பலி, வலிய காணிக்கை, பள்ளி கொள்ளுதல் ஆகிய நிகழ்ச்சியும் நாளை ஆராட்டு கொடி இறக்கல் நிகழ்ச்சியுடன் ஆராட்டு கலசம், உச்ச பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

The post பச்சை குதிரை விளையாடும் சிறுவர்கள் திருமயம் அருகே ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ayyappan temple Kumbabhishekam ,Tirumayam ,Thirumayam ,
× RELATED திருமயம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை