×

அத்திமரப்பட்டி அருகே சாலையோர குப்பையில் திடீர் தீயால் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

ஸ்பிக்நகர், ஜூலை 10: தூத்துக்குடி அடுத்துள்ள அத்திமரப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையோரத்தில் மின்சார டிரான்ஸ்பாரம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குவிந்து கிடக்கும் இந்த குப்பையில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்தது, பயங்கர காற்று காரணமாக வேகமாக தீ பரவ தொடங்கியது. மேலும் அப்பகுதியில் மரங்களிலும் தீ பற்றியது. இதனால் அந்த பகுதியில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது.

இதன் காரணமாக அவ்வழியே வாகனங்களில் வந்தவர்கள் பாதிப்புக்குள்ளாகி செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். உடனடியாக அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் தெர்மல்நகர் தீயணைப்பு துறைக்கு தகவல்‌ தெரிவித்தனர். தீயணைப்பு துறை அதிகாரி சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

 

The post அத்திமரப்பட்டி அருகே சாலையோர குப்பையில் திடீர் தீயால் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Athimarapatti ,Spignagar ,Pudukottai ,Tuticorin ,
× RELATED பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது