×

சுந்தராபுரம் உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.80 விற்பனை

 

மதுக்கரை, ஜூலை 10: தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரணமாக வரலாறு காணாத வகையில் தக்காளி விலை உயர்ந்து 1 கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் நிலையை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் தோட்டக்கலைத்துறை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்து உழவர் சந்தை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளிகளை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மதுக்கரை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் உதவி இயக்குனர் சுரேஷ் மேற்பார்வையில் மதுக்கரை வட்டாரத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை சந்தித்து, மார் ஒரு டன் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து அதனை சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து அங்கு வந்த பொதுமக்களுக்கு 1 கிலோ தக்காளி ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.130 க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.80க்கு தக்காளி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post சுந்தராபுரம் உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.80 விற்பனை appeared first on Dinakaran.

Tags : Sundarapuram ,Madhukarai ,Tamil Nadu ,
× RELATED ஈச்சனாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது