×

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி

 

தேனி, ஜூலை 10: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்வி நிறுவனத்திற்குட்பட்ட தேனி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர் 750 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி நிர்வாக இயக்குநர் சுருதிமோகன்ராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். ஏற்பாடுகளை சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் உடற்பயிற்சி இயக்குநர் ராஜதுரை செய்தார்.

The post மாவட்ட அளவிலான தடகளப் போட்டி appeared first on Dinakaran.

Tags : Theni ,College of Arts and Science ,Saurashtra Institute of Education ,Veerapandi ,Dinakaran ,
× RELATED திருச்சியில் பரபரப்பு: ஆசிரியர் மீது...