
திருச்சுழி, ஜூலை 10: திருச்சுழி அருகே மாட்டு தீவனம் தீ பிடித்து எரிந்து நாசமானது. திருச்சுழி அருகே என்.முக்குளத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன்(50). இவர் விவசாயம் செய்து வருகிறார். ஜலாலுதீன் தனது வீட்டில் மாடுகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மாடுகளுக்கு தேவையான தீவனமாக சுமார் ரூ.15,000 மதிப்புள்ள வைக்கோல் கட்டுகளை வாங்கி வீட்டின் பின்புறமாக அடுக்கி வைத்துள்ளார்.
வழக்கம் போல் ஜலாலுதீன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளி பகுதிக்கு ஓட்டி சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புறத்தில் இருந்து வெறும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து ஜலாலுதீன் அவசர அவசரமாக சென்று பார்த்தபோது வீட்டிற்கு பின்புறமாக மாடுகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜலாலுதீன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வைக்கோல் படப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார்.
பலத்த காற்று வீசியதால் வைக்கோல் கட்டுகள் மேலும் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனையடுத்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் கால்நடைகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகள் அனைத்தும் எரிந்து கருகி நாசமானது.
The post திருச்சுழி அருகே தீ விபத்தில் வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.