
யவத்மால்: 2019ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலுக்கு முன்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி நடந்து கொண்டிருந்தால், இதர கட்சிகளுக்காக கம்பளத்தை தூக்கி செல்லும் நிலைமை பாஜவுக்கு ஏற்பட்டிருக்காது முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார். சிவசேனா உத்தவ் பால் தாக்கரே அணி தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் விதர்பா மண்டலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். யவத்மால் நகரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ கடந்த 2019ம் ஆண்டு பேரவை தேர்தலுக்கு முன்னர் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது என பாஜ தலைவர் அமித் ஷாவுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
என்னுடைய கோரிக்கைக்கு அப்போது மதிப்பளித்திருந்தால் வேறு கட்சிகளுக்கு கம்பளத்தை தூக்கி சென்று விரிக்கும் நிலைமை பாஜவுக்கு ஏற்பட்டிருக்காது. பாஜ, சிவசேனா முதல்வர்கள் தங்கள் பதவி காலத்தையும் நிறைவு செய்திருப்பார்கள். அடுத்தவர்கள் பற்றி விமர்சிப்பதற்கு பாஜவுக்கு உரிமை இல்லை. கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ளவர்களை அந்த கட்சி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பார்க்க போகிறேன்’’ என்றார்.
The post என் கோரிக்கைக்கு மதிப்பளித்திருந்தால் பாஜவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது: உத்தவ் தாக்கரே விமர்சனம் appeared first on Dinakaran.