×

கனடா ஓபன் பேட்மின்டன் பைனலில் லக்‌ஷியா சென்: சிந்து ஏமாற்றம்

கல்காரி: கனடா ஓபன் சூப்பர் 500 பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் லக்‌ஷியா சென் தகுதி பெற்றார். அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவுடன் (11வது ரேங்க்) மோதிய லக்‌ஷியா சென் (21 வயது, 19வது ரேங்க்) 21-17, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் சிந்து 14-21, 15-21 என்ற நேர் செட்களில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் அகானே யாமகுச்சியிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். சிந்து வெண்கலப் பதக்கத்துடன் திருப்தியடைந்த நிலையில், சென் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளார்.

The post கனடா ஓபன் பேட்மின்டன் பைனலில் லக்‌ஷியா சென்: சிந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Lakshya Sen ,Canada Open badminton ,Sindhu ,Calgary ,India ,Canada Open Super 500 Badminton Men's Singles ,Canada Open Badminton Final ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....