×

காய்கறிகள் விலையேற்றத்தை வேளாண் துறை, வணிக சங்கத்துடன் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: கோயம்பேட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக, சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை போல, சிறு வியாபாரிகளும் ஆன்லைனில் பொருட்களை விற்பது குறித்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் வாட்ஸ்- அப் வழி வியாபாரி என்ற பெயரில், வியாபார யுக்தி பற்றி வியாபாரிகள் சங்க பேரமைப்பு சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய வணிக சம்மேளன பொது செயலாளர் பிரவின்கண்டேல்லால் மற்றும் புதுடில்லி ஐடி தொழில் நுட்ப பிரிவு ராஜீவ்மாலிக் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், பேசிய விக்கிரமராஜா, ‘‘நெல் போல காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்வதை விட்டுவிட்டு, ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத வேலை.

குறைந்த கட்டணத்தில் வணிகர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வாட்ஸ்-அப் யுக்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் காய்கறிகள் விலையேற்றத்தை, வேளாண்மை துறை அதிகாரிகள், வணிக சங்க நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post காய்கறிகள் விலையேற்றத்தை வேளாண் துறை, வணிக சங்கத்துடன் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Wickramaraja ,Chennai ,Tamil Nadu Merchant Association ,Chennai Zone Business Development Consulting ,Business Commission ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்