×

‘போஸ்டர் மீது கை வச்சா வெட்டுவோம்’பிடிஓவை மிரட்டிய அதிமுக நிர்வாகி

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன். இவரது தம்பி ஏ.கே.எஸ்.அறிவழகன் அதிமுக நகர துணை செயலாளர் மற்றும் ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த 7ம் தேதி செய்யாறு பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக முன்னாள் எம்எல்ஏ சார்பில், பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய சுவரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட சேர்மன் மற்றும் பிடிஓ, வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் அலுவலக உதவியாளர் மூலமாக போஸ்டரை அகற்றினர்.

இதுகுறித்து போன் மூலம் நகரத் துணைச் செயலாளர் ஏ.கே.எஸ் அறிவழகனிடம், பிடிஓ தொடர்பு கொண்டு ‘கட்சி போஸ்டர்களை ஏன் அலுவலக வளாகத்தின் உள்ளே ஒட்ட வேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு ஏ.கே.எஸ் ‘நாங்க கண்டன போஸ்டர்களை கலெக்டர் ஆபீசிலேயே ஒட்டி உள்ளோம். அங்கு யாரும் கேட்பதில்லையே?. இது ஏ.கே.எஸ் போஸ்டர். இதன் மீது யாரும் கையை வைக்க கூடாது. அப்படி கையை வைத்தால் கையை வெட்டுவேன். போஸ்டர் ஒட்டியதற்கு அபராதம் போடுங்கள். இல்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள்’ என மிரட்டல் பாணியில் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘போஸ்டர் மீது கை வச்சா வெட்டுவோம்’பிடிஓவை மிரட்டிய அதிமுக நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,PTO ,MLA ,A. K. S. Anpahagan ,Peranamallur ,Constituency ,Tiruvannamalai District ,AKS Arivazhagan ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அதிமுக முன்னாள்...